குமரி அனந்தன்: மத்திய, மாநில அரசுக்கு துளியும் அக்கறையில்லை

குமரி அனந்தன்: மத்திய, மாநில அரசுக்கு துளியும் அக்கறையில்லை

1 mins read
d9f3cb69-0e19-487b-b8f3-1770884a33d5
-

தூத்துக்குடி: மத்திய, மாநில அரசுகளுக்கு மதுவிலக்கு, நதிநீர் இணைப்பு போன்ற மக்கள் நலன் சார்ந்த முக்கிய விஷயங்களில் சிறிதும் அக்கறை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் குற்றம்சாட்டி உள்ளார். தமிழகத்தில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் நடைபெற்ற மதுவிலக்கு பிரசாரக் கூட்டத்தில் பேசினார். அப்போது மத்திய, மாநில அரசுகளின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.

"அரசியலமைப்புச் சட்டத்தின் 47ஆவது பிரிவில் மாநில அரசுகள் மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து சொல்லப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி நடப்பேன் எனும் உறுதிமொழியுடன் பதவிப் பிரமாணம் செய்து கொள்கின் றனர். ஆனால், பிரதமர் மோடி, முதல்வர்கள் மம்தா பானர்ஜி, ஜெயலலிதா ஆகியோர் இதற்கு நேர்மாறாக ஆட்சி செய்து வருகின்றனர்," என்று குமரி அனந்தன் குற்றம்சாட்டினார்.