மகாமகம் பாதுகாப்பிற்கு முன்கூட்டியே நடவடிக்கை தேவை: விஜயகாந்த் வலியுறுத்து

மகாமகம் பாதுகாப்பிற்கு முன்கூட்டியே நடவடிக்கை தேவை: விஜயகாந்த் வலியுறுத்து

1 mins read
20c46e6c-9df6-4833-92ff-490e8c03a09c
-

சென்னை: கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு முன்கூட்டியே செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான அறிக்கை யில், திடீரென செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதைப் போல் செயல்படாது மகாமகத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன் கூட்டியே மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலி தாவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

பழைய சோக வரலாறு மீண்டும் திரும்பக்கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் தாம் இவ்வாறு அறிவுறுத்துவ தாகக் கூறியுள்ள அவர், பொதுமக் களின் அச்சத்தைப் போக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்