234 வேட்பாளர்களைக் களமிறக்குகிறது 'நாம் தமிழர்' கட்சி

234 வேட்பாளர்களைக் களமிறக்குகிறது 'நாம் தமிழர்' கட்சி

1 mins read
1197d336-27e1-4029-b130-27bfc9bcdcd5
-

சென்னை: வரும் சட்­ட­மன்றத் தேர்­த­லில் சீமா­னின் 'நாம் தமி­ழர்' கட்சி 234 வேட்­பா­ளர்களை­க் கள­மி­றக்­கவுள்ளது. அதற்கான வேட்பாளர் அறி முகக் கூட்டம் கடலூரில் இன்று மாலை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். இந்தத் தேர்­த­லில் 'நாம் தமி­ழர்' கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டு வைத்துக்கொள்ளாமல் தனித்­துப் போட்­டி­யி­டு­வ­தாக அறி­வித்­துள்­ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தமி­ழ­கத்­தில் அர­சி­யல் மாற்றம் ஏற்­பட வேண்­டும் என்ற நோக்­கத்­தில் தொடங்கப்­பட்ட 'நாம் தமி­ழர்' கட்சி அதற்­கான பாதை­யில் செவ்வனே செல்கிறது. "'நாம் தமி­ழர்' கட்­சி­யால் மட்­டுமே தமி­ழ­கத்­தில் நல்ல மாற்­றத்தைக் கொண்டு வரமுடி­யும்.

"எங்கள் திரு­நாட்­டில் எங்கள் நல் ஆட்­சியே, தலை­ந­கரை மாற்­று­வோம், தமி­ழ­கத்தையே மாற்­று­வோம் என்­கிற முழக்­கங்களு­டன் தேர்­தலைச் சந்­திக்க உள்­ளோம். "மாற்றம் வரும், நிச்­ச­யம் மாற்­றத்தை ஏற்­படுத்­து­வோம். தமி­ழர்­கள் அதி­கம் வசிக்­கும் கேரள மாநி­லத்தின் மூணாறு சட்­ட­மன்றத் தொகு­தி­யி­லும் நாம் தமி­ழர் கட்சி போட்­டி­யி­டு­கிறது," என்று கூறினார்.

'நாம் தமி­ழர்' கட்சி சீமான். படம்: ஊடகம்