தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதை மாத்திரைகள், தங்கம் பறிமுதல்

1 mins read
6e8d3bef-4f91-4962-a765-1224010ea696
-

சென்னை: மலேசியாவுக்கு போதை மாத்திரைகளைக் கடத்த முயன்ற லியாகத் அலி என்ற 35 வயது இளையர் சென்னை விமான நிலையத் தில் பிடிபட்டார். வெள்ளிக்கிழமை அதிகாலை மலேசியா செல்ல விமான நிலையம் வந்தபோது, அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை யிட்டனர். அப்போது அவரது பெட்டியில் நிறைய மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது. அது தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதேபோல் வெள்ளிக்கிழமையன்று சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வந்த பெண்ணிடம் இருந்து 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.