தமிழக அரசு ஊழியர்களோடு ஆசிரியர்களும் இணைந்து தொடர் போராட்டம்

தமிழக அரசு ஊழியர்களோடு ஆசிரியர்களும் இணைந்து தொடர் போராட்டம்

2 mins read
6c946bdc-feb8-4d5a-bb98-10ade2f66a66
-

தமிழக அரசு ஊழியர்கள் சங்கங் களின் கூட்டமைப்பினர் கடந்த 10ஆம் தேதி முதல் வேலைநிறுத் தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, காலியாக உள்ள இடங்களை நிரப்புதல் போன்றவை உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 12ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்திய 60,000 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். சனி, ஞாயிறு வார விடுமுறைக்குப் பின்னர் நேற்றும் அவர்கள் தங் களது போராட்டத்தைத் தொடர்ந் தனர்.

உண்ணாவிரதம், ஆர்ப்பாட் டம், சாலை மறியல் என பல கட்டப் போராட்டங்களை நடத்திய அவர்கள் நேற்று முதல் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் நேற்று வேலைநிறுத்தத்தில் குதித் தது. தொடர் சாலை மறியல் போராட் டம், ரயில் மறியல் போராட்டம் என தங்களது போராட்ட வடி வங்களை மாற்ற முடிவெடுத்த அரசு ஊழியர்களும் ஆசிரியர் கூட்டணியும் அதன்படி நேற்று மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தின. சென்னை சேப்பாக்கம் விருந் தினர் மாளிகைக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இதேபோல மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று கைதாகினர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நேற்று மறியல் போராட்டம் நடத்திய 300க்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். படம்: சதீஷ்