சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு சம்பளப் பாக்கி

சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு சம்பளப் பாக்கி

18 Feb 2016 - 9:02 am

1 mins read

சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னிலையான அரசு வழக்கறிஞருக்கு முழுமையாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதையடுத்து சதீஷ் கிர்ஜி என்ற அவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சதீஷை கடந்தாண்டு ஜனவரியில் அரசு வழக்கறிஞராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை நியமித்தது. முதல்கட்டமாக தமக்கு 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அதன் பின்னர் உரிய தொகை தரப்படவில்லை என்பதுமே சதீ‌ஷின் புகாராகும்.