கோவை: விடுலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார் எனத் தமிழர் தேசிய இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஈழப்போர் வெடிக்கும் என்றார். சட்டப்பேரவைத் தேர்தலில் ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் புறக்கணிக்கும் கட்சிகளுக்குத் தமிழக மக்கள் உரிய தண்டனை வழங்குவார்கள் என்று குறிப்பிட்ட அவர், இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட காரணமாக இருந்த திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கடந்த தேர்தலில் மக்கள் தோல்வியைக் கொடுத்ததாகக் கூறினார்.
"இந்திய அரசு பிரபாகரன் இறந்துவிட்டதாக இன்னும் அறிவிக்கவில்லை. பிரபாகரன் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு பொய்யாகும். அவர் உயிருடன் உள்ளார். "இனப் படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படாத நிலையில், ராஜபக்சேவுக்குப் பிறகு இலங்கை அதிபராகியுள்ள சிறிசேன ஆட்சியிலும் ஈழ மக்களின் இன்னல்கள் தொடர்கின்றன. "தமிழகர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதற்குத் தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்," என்றார் பழ.நெடுமாறன்.

