குழந்தைகளுக்கான பூங்காவிலும் ஜெயா படம்

குழந்தைகளுக்கான பூங்காவிலும் ஜெயா படம்

1 mins read
0d1a7537-b95c-4911-89e8-b2a3e4893df0
-

சென்னை: அதிமுகவினர் நடத்தக் கூடிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஜெயலலிதாவின் படத்து டன் கூடிய பதாகைகள், சுவரொட்டி கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அண்மையில் ஏழை ஜோடிக ளுக்கு அதிமுக ஏற்பாட்டில் திரும ணம் செய்து வைக்கப்பட்டபோது மணமக்களின் நெற்றியில் முதல் வர் ஜெயலலிதாவின் புகைப்படத் துடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டப் பட்டது கடும் விமர்சனத்துக் குள்ளானது.

இந்நிலையில், குழந்தைகளிட மும் ஜெயலலிதாவுக்கு பெயர் வாங்கிக் கொடுக்க அதிமுகவின ரும் அரசு அதிகாரிகளும் முடிவு செய்துவிட்டனர் போலிருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கான பூங்காக்களில் நிறுவப்பட்டுள்ள விளையாட்டு சாதனங்களிலும் முதல்வர் ஜெய லலிதாவின் படங்கள் ஒட்டப் பட்டுள்ளன. இதுவும் சர்ச்சைக்கு உள்ளாகும் எனத் தெரிகிறது. படம்: தமிழக ஊடகம்