மிரட்டும் தொனியில் பேசினார் பிரியங்கா: நளினி பரபரப்பு தகவல்

1 mins read
36aadc8e-b36c-42e1-98e4-b62eef70ca7a
-

வேலூர்: பிரியங்கா காந்தி தன்னை வேலூர் சிறையில் சந்தித்தபோது மிரட்டும் தொனியில் பேசியதாக ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியாகக் கூறப்படும் நளினி தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமக்கு சிறையில் எந்தவித வசதிகளும் செய்து தரக்கூடாது என பிரியங்கா சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் நளினி மேலும் கூறியுள்ளார். "பிரியங்காவுடன் பேசிய முழு விவரத்தையும் இப்போது சொல்ல முடி யாது. ஆனால், அவர் என்னிடம் மிரட்டல் தொனியில் பேசினார். சிறையில் ஒவ்வொரு நாளையும் கழிப்பது மிகக் கொடுமையாக உள்ளது," என்று நளினி தெரிவித்துள்ளார்.