60,000 குழந்தைகள் மாயம்: கண்டுபிடிக்க முடியாமல் திணறல்

60,000 குழந்தைகள் மாயம்: கண்டுபிடிக்க முடியாமல் திணறல்

1 mins read
dd9ce613-d5a7-472b-afc5-2e25699eda81
-

புதுடெல்லி: ஆண்டுதோறும் ரூ.2.5 கோடி செலவிடப்பட்ட போதிலும் நான்காண்டுகளில் காணாமல் போன 60,000 குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது மத்திய அரசு. மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூத்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 1,94,213 குழந்தைகள் மாயமானதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 1,29,270 குழந்தைகள் மீட்கப்பட்டு, குடும்பத் தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர். எனினும் 64,943 குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்கள் கடந்த ஜனவரி 2012 முதல் பிப்ரவரி 2016 வரை காணாமல் போனவர்கள்," என்று தெரிவித்துள்ளார்.