தமிழிசை: விஜயகாந்துடன் பேசி வருகிறோம்

தமிழிசை: விஜயகாந்துடன் பேசி வருகிறோம்

1 mins read
8cf74147-01dd-480f-86cb-5277ab085df1
-

சென்னை: எந்தவொரு கட்சித் தலைவரையும் ரகசியமாகவோ மறைமுகமாகவோ சந்திக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடையே ரகசியச் சந்திப்பு ஏதும் நிகழவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

"ஊடகங்கள் குறிப்பிடும் வகையில் அப்படியொரு சந்திப்பே நிகழவில்லை. விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டி ருக்கிறது. அதன் முடிவில்தான் கூட்டணி குறித்து எதுவும் உறுதியாகத் தெரியும்," என்றார் தமிழிசை. பாஜக தேர்தல் அறிக்கை முழு மையாகத் தயாராகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மிக விரைவில் அதை வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார். தமிழக மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடியதாக அந்த அறிக்கை இருக்கும் என்றும் அவர் கூறினார்.