நீலகிரி: கள்ள நோட்டுகள் அச்சடித்து விநியோகிக்க முயன்ற மூவரை குன்னூர் போலிசார் கைது செய்தனர். அண்மையில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபு என்பவர் போலிசாரிடம் பிடிபட்டார். அவரிடம் கள்ள நோட்டுகள் இருப்பதும் தெரியவந்தது. விசாரணையில் கள்ள நோட்டுகளை அச்சடிப்பவர்கள் குறித்து அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஊட்டியில் இருந்த தேவதாஸ், ரவி ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊட்டியில் கள்ள நோட்டு அச்சடித்து விநியோகிக்க முயன்ற மூவர் கைது
1 mins read
-

