கார் விபத்தில் சிறு காயத்துடன் உயிர் தப்பிய ஸ்மிருதி இரானி

கார் விபத்தில் சிறு காயத்துடன் உயிர் தப்பிய ஸ்மிருதி இரானி

1 mins read
897d5301-b90d-4656-a7f4-9209842e3cfe
-

புதுடெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்ற கார் நேற்று முன் தினம் இரவு விபத்துக்குள்ளான தில் சிறு காயங்களுடன் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உத்தரப்பிரதேச மாநிலம் விருந் தாவனில் நடந்த பாஜக இளை ஞரணியினர் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு யமுனா எக்ஸ் பிரஸ் சாலை வழியாக டெல்லி திரும்பிக்கொண்டிருந்தார் ஸ்மிருதி இரானி. அப்போது அவரது காருக்கு முன்பாக சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனம் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதியது.

இதனையடுத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஸ்மிருதி இரானியின் கால்முட்டியில் சிறிய காயம் ஏற் பட்டது. மேலும் மூன்று பாதுகாப்பு காவலர்களுக்கும் காயம் ஏற்பட் டது. இருசக்கர வாகனத்தில் வந்தவர் இறந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.