திருச்சி: சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைதாகினர். மலேசியாவில் இருந்து வந்த சையதுஅலி என்ற பயணி, சுமார் 140 கிராம் தங்கத்தை மின்னணு சாதனத்துக்குள் மறைத்து கடத்தி வந்தார். அதன் மதிப்பு ரூ. 4.65 லட்சமாகும். இதேபோல் சிங்கப்பூரில் இருந்து வந்த ஷேக் ராவுத்தர் என்ற பயணி 320 கிராம் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தார். அதன் மதிப்பு ரூ. 9.45 லட்சமாகும். இருவரிடமும் இப்போது விசாரணை நடந்து வருகிறது.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் தங்கம் பறிமுதல்
1 mins read
-