சகாயம்: வாக்குச் சீட்டு விற்பனைப் பொருளல்ல

1 mins read
fb39903e-5f68-4c81-a0a5-4ce56b1b7727
-

மதுரை: பணம் நிரப்பப்பட்ட உறைகளை விரும்பாமல் ஜனநாயக உரிமையை நிலை நாட்ட வாக்களிக்கவேண்டும் என்று வாக்காளர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரையில் நேற்று செய்தி யாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் என்பது ஜனநாயகத் தின் அடிப்படை ஆதாரம். விற்பனைக்குரிய பொருளாக வாக்குகளை மாற்றிவிடக் கூடாது. நேர்மையானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். தமிழக சட்ட மன்றத் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறும் என்று நம்புகிறேன்," என்று கூறி உள்ளார்.