கோவை: பாமக முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாசுக்கு தமிழத்தின் தற்போதைய அரசியல் சூழல் மனநிறைவைத் தந்திருப்பதாகத் தெரிகிறது. பாமகவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக அவர் கூறியுள்ளார். "தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தபின், தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை பாமகவுக்குச் சாதகமாக மாறியுள்ளது. தேமுதிகவின் தனித்துப் போட்டி முடிவால் திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். திமுகவின் சகாப்தம் முடிந்து அது மூழ்கும் கப்பலாகக் காணப்படுகிறது," என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி: சாதகமான சூழ்நிலை
1 mins read
-

