சென்னை: கடந்த ஐந்து வருடத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண அதிமுக அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இதிலிருந்து அதிமுக எந்த அளவிற்கு விவசாயிகளுக்கு விரோதமான அரசாகத் திகழ்கிறது என்பது தெரிய வருவதாக அவர் சமூக வலைதளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். "விவசாயிகளுக்கு நேரும் அவமானங்களையும் அடக்குமுறைகளையும் தமிழக அரசு உடனடியாக தடுக்க வேண்டும். தமிழகத்தில் 2014ஆம் ஆண்டில் மட்டும் 895 விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். விவசாயிகளை வறுமையின் விளிம்பிற்கே கொண்டு போய் நிறுத்திவிட்டது அதிமுக அரசு," என்று ஸ்டாலின் மேலும் குற்றம்சாட்டி உள்ளார்.
விவசாயிகளுக்கு விரோதமான அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
1 mins read
-

