வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை மீட்ட அதிகாரிகள்

1 mins read
c294686a-6329-460a-bf31-f59d1f1861fe
-

கௌஹாத்தி: கஹை­லி­பாரா பகு­திக்கு அருகில் உள்ள கமால் நகரில் சிறுத்தை ஒன்று கிணற்­றுக்­குள் விழுந்தது. வனத்­துறை அதி­கா­ரி­கள் சம்பவ இடத்­துக்கு விரைந்­து­சென்று மயக்க மருந்து கொடுத்து சிறுத்தையைக் கிணற்­றுக்­குள் இருந்து மீட்­ட­னர். இரவு நேரத்­தில் கிணற்­றுக்­குள் விழுந்து, வெளியேற வழி­தெ­ரி­யா­மல் மாட்­டிக்­கொண்ட புலியை அதிகாலை வேளையில் தண்ணீர் எடுக்க வந்த பெண்கள் கண்டனர். அவர்­க­ளது தக­வ­லின் பேரில் போலி­சா­ரும் வனத்­துறை அதி­கா­ரி­களும் சிறுத்தையைக் காப்பாற்றி கௌஹாத்தி விலங் கியல் தோட்டத்துக்குக் கொண்டு சென்றனர். சிறுத்தை­கள் ஊருக்­குள் புகுந்து பலரைக் கொன்ற சம்ப­வங்களும் இப்­ப­கு­தி­யில் நிகழ்ந்துள்ளன. படம்: ஏஎஃப்பி