கௌஹாத்தி: கஹைலிபாரா பகுதிக்கு அருகில் உள்ள கமால் நகரில் சிறுத்தை ஒன்று கிணற்றுக்குள் விழுந்தது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று மயக்க மருந்து கொடுத்து சிறுத்தையைக் கிணற்றுக்குள் இருந்து மீட்டனர். இரவு நேரத்தில் கிணற்றுக்குள் விழுந்து, வெளியேற வழிதெரியாமல் மாட்டிக்கொண்ட புலியை அதிகாலை வேளையில் தண்ணீர் எடுக்க வந்த பெண்கள் கண்டனர். அவர்களது தகவலின் பேரில் போலிசாரும் வனத்துறை அதிகாரிகளும் சிறுத்தையைக் காப்பாற்றி கௌஹாத்தி விலங் கியல் தோட்டத்துக்குக் கொண்டு சென்றனர். சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து பலரைக் கொன்ற சம்பவங்களும் இப்பகுதியில் நிகழ்ந்துள்ளன. படம்: ஏஎஃப்பி
வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை மீட்ட அதிகாரிகள்
1 mins read
-

