'கழிவறை இல்லையெனில் காய்கறியும் இல்லை; முடிவெட்டுவதும் இல்லை'

'கழிவறை இல்லையெனில் காய்கறியும் இல்லை; முடிவெட்டுவதும் இல்லை'

1 mins read
c9e7378b-5096-47e2-aa2e-3e1982d4e348
-
Google News Preferred Icon

புதுடெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வீடுகளில் கழிவறைகள் கட்டாதவர்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்வதில்லை; முடிவெட்டுவது இல்லை என மத்தியப் பிரதேச மாநிலம், ரட்லம் மாவட்டம், புதேடா எனும் கிராமத் தைச் சேர்ந்த துரிபாய் என்ற வியாபாரியும் அமருலால் சென் என்ற முடிதிருத்துபவரும் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்ஈ

அமருலால் சென் கூறுகையில், "வீட்டில் கழிவறைகள் கட்டாதவர்கள் என் கடைக்கு வந்தால் அவர்களுக்கு சவரம் செய்யவோ முடிதிருத்தவோ முடியாது என மறுத்து விடுவேன். அதேசமயம், கழிவறைகள் கட்டிவிட்டு வந்தால் முதல்முறை இலவசமாகவே முடிதிருத்தியும் சவரம் செய்தும் விடுகிறேன்," என்றார்.