வழிப்பறி, கொள்ளையடித்து சொகுசாய் வாழ்ந்த எல்லம்மா

வழிப்பறி, கொள்ளையடித்து சொகுசாய் வாழ்ந்த எல்லம்மா

1 mins read
1330ff1e-1697-47d3-a2a0-e631bd47ff71
-

சென்னை: தமி­ழ­கத்­தின் பல பகு­தி­களில் கடந்த 30 ஆண்­டு­க­ளாக கொள்ளை, வழிப்­பறி ஆகி­ய­வற்­றில் கலக்கி வந்த பெண் இப்­போது போலி­சி­டம் வச­மாக சிக்­கி­யுள்­ளார். கொள்ளை­ய­டிக்­கும் பணத்தைச் சேர்த்து வைத்து ஒரு பெரிய பண்ணை வீடே கட்டி சொகு­சாக வாழ்க்கை நடத்­து­வதாக அவரே பரபரப்­பாக போலிஸ் விசா­ரணை­யில் வாக்­கு­மூ­லம் கொடுத்­துள்­ளார். கைது செய்­யப்­பட்ட பெண்­ணின் பெயர் எல்­லம்மா (வயது 45). வேலூர் மாவட்­டம் திருப்­பத்­தூர் தாலுகா ஆல­ம­ரத்து அருகே உள்ள மதுரா கிரா­மத்தைச் சேர்ந்த­வர். இவர் மீது தமி­ழ­கம் முழு­வ­தும் கொள்ளை வழக்­கு­கள் நிலுவை­யில் உள்­ளன. சென்னை­யில் தேனாம்­பேட்டை, மாம்ப­லம், அசோக்­ந­கர், வட ­ப­ழனி, வள­ச­ர­வாக்­கம், சாஸ்­திரி நகர், கும­ரன் நகர் ஆகிய காவல்­துறை நிலை­யங்களில் இவர் மீது கொள்ளை வழக்­கு­கள் நிலுவை­யில் உள்­ளன.

இவர் தமி­ழ­கம் முழு­வ­தும் மிகப்­பெ­ரிய கொள்ளைக்­கா­ரி­யாக வலம் வந்­துள்­ளார். ஆனால், காவல்­துறை­யி­னரை கைக்­குள் போட்­டுக்­கொண்டு பிணை­யில் வெளி­வந்து விடு­வார். இவர் தனது உண்மை­யான வீட்டு முக­வ­ரியைக் கொடுக்­க­மாட்­டார். பொய்­யான முக­வ­ரியைக் கொடுத்­துத் தப்­பித்து வந்தார். அண்மை­யில் வட­ப­ழனி முரு­கன் கோயி­லில் வய­தான பெண்­களின் கவ­னத்தைத் திசை­ தி­ருப்பி, நகை­களைப் பறித்­துச்­சென்­று­விட்­டார். இவர் நகை­களைக் பறிக்­கும் காட்சி கண்­கா­ணிப்புக் கரு­வியில் பதி­வாகி இருந்தது. புகைப்­ப­டக் கரு­வி­யின் காட்­சி­களைப் பார்த்து போலி­சார் இவரை அடை­யா­ளம் கண்ட­னர். இவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. இவரைப் பிடிப்பதற்காக தனி காவல்­துறை ­படை அமைக்­கப்­பட்­டது.