நடிகர் கலாபவன் மணி (படம்) அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் உயர்மட்ட விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட இருக்கிறது. தமிழ், மலையாள படங்களில் நடித்த கலாபவன் மணி கடந்த 6ஆம் தேதி மரணம் அடைந்தார். பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது குடித்தபோது மயங்கி விழுந்து மருத்துவ மனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்த கலாபவன் மணி உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் அருந்திய மதுவில் அதிக மெத்தனால் இருந்ததாகத் தெரிவித்தனர். உரிமம் பெற்று விற்கப்படும் மதுவில் இவ்வளவு அதிக மெத்தனால் இருக்க வாய்ப்பு இல்லை என்றனர்.
கலாபவன் மணி மரணம்: உயர்மட்டவிசாரணை தொடக்கம்
1 mins read
-

