பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்

பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்

1 mins read
a69c2a37-f8e0-400b-b1f9-0e83447e2e2e
-

சென்னை: பிரபல திரைத் துறை மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் முதுமை காரணமாக சென்னையில் காலமானார். 88 வயதான அவர் தமிழ்த் திரையுலகின் முதல் மக் கள் தொடர்பாளர் ஆவார். தமிழ்த் திரையுலகின் வரலாற்றைப் பதிவு செய்தவர்களில் முதன்மை யானவர் ஆனந்தன். தமிழ்த் திரையுலகின் தகவல் பெட்டமாகவும் திகழ்ந்த அவர் காலஞ் சென்ற எம்ஜிஆரின் படத்திற்கு முதன்முதலாக மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றினார். தமிழ்ச் சினிமா தொடர்பான பல அரிய ஆவணங்கள், தக வல்களை சேகரிப்பதற்கே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டார் ஆனந்தன்.