வைகோ உட்பட மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களின் வருகைக்காகக் காத்திருந்த வி-ஜயகாந்த் ஏமாற்றமடைந்துள்ளார். நேற்று முன்தினம் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை சந்திக்க வருவதாகத் தகவல் பரவியது. கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வழக்கமாக 12.00 மணிக்கு வரும் விஜயகாந்த் 11.00 மணிக்கே வந்து விட்டார். அந்த சமயத்தில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வீட்டுக்குப் போய் விட்டனர். இதற்கிடையே தம் தலைமையை ஏற்க மக்கள் நலக் கூட்டணி முடிவு செய்துவிட்டதாக நம்பிய விஜயகாந்த், ஒன்றரை மணி நேரம் அவர்களுக்காகக் காத்திருந்து ஏமாற்றமடைந்தார். அவர்கள் வராததால் விஜயகாந்த் வெறுத்துப் போய் கிளம்பிவிட்டதாக தமிழக ஊடகம் ஒன்று குறிப்பிட்டது.
விஜயகாந்துக்கு ஏமாற்றம்
1 mins read
-

