அன்புமணி: தேமுதிகவில் பிளவு ஏற்படுத்த கருணாநிதி திட்டம்

அன்புமணி: தேமுதிகவில் பிளவு ஏற்படுத்த கருணாநிதி திட்டம்

1 mins read
02071f7c-7d1d-47a7-9064-5fd3b8575dab
-

சென்னை: திமுக மூழ்கிக்கொண்டி ருக்கும் கப்பல் எனப் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வர்ணித்துள்ளார். தேமுதிகவுடன் எப்படியேனும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக கெஞ்சிக்கொண்டிருக் கும் திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிகவில் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். "தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் கருணா நிதியும் ஸ்டாலினும் மாறி மாறிப் பேசு வது முரண்பாடாக உள்ளது. ஒரு ஞானப் பழத்தின் மீது உள்ள நம்பிக்கை பற்றி இன்னும் எவ்வளவு காலம்தான் பேசுவார்கள் என்று தெரியவில்லை.

"எனக்குத் தெரிந்தவகையில் தேமுதிகவைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடனேயே கருணாநிதி இவ்வாறு பேசுவதாகக் கருதுகிறேன். ஏனெனில் கடந்த காலங்களிலும் கருணாநிதி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்," என்று அன்புமணி குற்றம்சாட்டினார். இதற்கிடையே, எதிர்வரும் தேர்த லில் தமிழக மக்களால் ஊழல் கட்சி கள் புறக்கணிக்கப்படும் எனப் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார். விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாமக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், "தமிழகம் மிக விரைவில், ஒரு புதிய விடியலை நோக்கி பயணிக்கப் போகிறது," என்றார்.