அதிமுகவினர் துரோகிகள்: ஆளும் எம்எல்ஏ பேச்சால் சலசலப்பு

அதிமுகவினர் துரோகிகள்: ஆளும் எம்எல்ஏ பேச்சால் சலசலப்பு

1 mins read
f2a4dceb-9f0f-48e8-ba9e-bd108694120a
-

சென்னை: அதிமுகவினர் துரோகிகள் என பல்லாவரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ தன்சிங் கூறியதால், அக்கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் மோதல் வெடித்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவினரில் சிலர் முதுகில் குத்துபவர்கள் என்றார். "நான்தான் பல்லாவரத்தில் அதிமுகவை வளர்த்தேன். ஆனால், நான் மீண்டும் எம்எல்ஏ ஆகக்கூடாது எனக் கருதி, என் மீது பொய் புகாரை தலைமைக்கு அளித் துள்ளனர்," என்றார் தன்சிங். இதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து குரல் எழுப்பியவர்கள் தாக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து அதிமுக தலைமையகம் விசாரித்து வருகிறது.