தமிழக அரசு மீது முத்தரசன் புகார்

தமிழக அரசு மீது முத்தரசன் புகார்

1 mins read
74a575e1-8a8b-4e1e-aee0-7f4ec80aae47
-

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழகம் அமைதி காத்தது தவறு என்றும் இதற்காக தமிழக அரசைக் கண்டிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குகளில் விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் விவசாயிகள் நலன் கருதி உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.