மதுவுக்கு எதிராகப் பேசிய ஆறு பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு

1 mins read
559ed839-0c4c-4901-9cc5-26a87735ddc9
-

திருச்சி: மது ஒழிப்பு மாநாட்டில் பேசிய 6 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் திருச்சியில் இம்மாநாடு நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட ஆறு பேரும் மதுவால் தமிழகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப் பிட்டதுடன், பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் வலியுறுத்திப் பேசினர். இந்நிலையில் மாநாடு முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் 6 பேர் மீதும் வழக்குப் பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.