புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள், கிராமங்களில் தாய், சேய் நல விடுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாய், சேய் நல விடுதிகள் பிரசவ மருத்துவமனைகளாகவும் செயல்படுகின்றன. ஆனால், தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படும் வகையில் புதிதாக இலவச மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பெண்கள் இங்கு வந்து தைரியமாக தங்களது உடல் பாதிப்புகளை எடுத்துச் சொல்லி சிகிச்சை பெற முடியும். அதற்கு ஏற்ப மருந்துப் பொருட் களும் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மருத்துவமனையுடன் இணைந்து மருந்துக் கடைகளும் செயல்படுகின்றன.
உடல்நலக் கோளாறுகளால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக வெளியான புள்ளி விவரங்களைத் தொடர்ந்து பெண் களுக்கென சிறப்பு மருத்துவமனைகளைத் தொடங்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். இதில் முதல் கட்டமாக 21 இடங்களில் இந்த மருத்துவமனை கள் தொடங்கப்பட்டுள்ளன. முனீர்கா என்ற இடத்தில் அமைக்கப்பட்ட மருத்துவமனையை கெஜ்ரிவால் தொடங்கி வைத் தார். அவர் கூறுகையில், "முன்பு இருந்த மருத்துவமனைகள் ரூ.5 கோடி செலவில் சில இடங்களில் மட்டும் தொடங்கப்பட்டன. "ஆனால், இப்போது ரூ.20 லட்சம் செலவில் பல இடங்களில் இந்த மருத்துவமனைகள் விரி வாக்கம் செய்யப்பட்டுள்ளன. "இங்கு பெண்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மருந்துகள், மருத்துவ பரிசோதனைகள் செய் யப்படும். "இந்த ஆண்டு இறுதிக்குள் இதுபோன்ற 1,000 மருத்துவ மனைகள் தொடங்கப்படும்," என் றார் முதல்வர் கெஜ்ரிவால்.

