இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலம் சுர்கூஜா மாவட்டம் அம்பிகாபூரைச் சேர்ந்தவர் 25 வயது மனிதாவுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து பிள்ளைகள் பிறந்துள்ளன. கருவுற்றிருந்த மனிதா மார்ச் 31ஆம் தேதி, பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் மனிதாவிற்கு நேற்று ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தன. எல்லாக் குழந்தைகளும் 1 கிலோ, 1.5 கிலோ என எடை குறைவாக பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் குழந்தைகளின் பால் விவரம் குறித்து எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. அக்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங் களும் அவரது கணவர் உமேஷ்குமாரும் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்
1 mins read
-

