இந்திய தேசிய புலனாய்வு அதிகாரி சுட்டுக்கொலை

1 mins read
fc7bfd62-a03f-4611-848c-00d730656d98
-

இந்தியாவின் மூத்த தேசிய புலனாய்வு அதி­கா­ரி­யான தன்சில் அகம்­மது உத்­தி­ரப் பிர­தே­சத்­தில் சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ளார். பிஜ்­னோ­ரில் நடக்­கும் திருமண நிகழ்ச்­சிக்கு மனை­வி­யு­டன் சென்­று­விட்டு திரும்­பிக்­கொண்­டி­ருந்த­போது மோட்டார் சைக்­கி­ளில் வந்த இரு மர்ம நபர்­கள் அவர் காரை நோக்கிச் சர­மா­ரி­யாக சுட்­டுள்ளனர். ரத்த வெள்­ளத்­தில் கிடந்த அவரை பொதுமக்கள் மொரதா­பாத் மருத்­து­வ­மனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்­து­வ­மனை செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. படு­கா­ய­முற்ற அவரது மனைவி பர்­ஷானா­வுக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

பஞ்சாப் மாநிலம் பதன்­கோட் விமான படை தளத்­தில் பயங்க­ர­வா­தி­கள் ஜனவரி மாதம் நடத்­திய தாக்­கு­தல் தொடர்­பான விசா­ரணைக் குழுவில் இவர் இடம் பெற்­றுள்­ளார். இவர் மேலும் பல்வேறு பயங்க­ர­வாத தொடர்­புடைய முக்கிய வழக்கை விசா­ரித்­த­வர் என்றும் கூறப்­படு­கிறது. எனவே, தன்சில் கொலையில் பல்வேறு மர்ம முடிச்­சு­கள் முழு விசா­ரணைக்­குப் பின்னரே தெரிய வரும் எனப் பயங்க­ர­வா­தி­கள் தடுப்­புச் சிறப்­புப் படை காவல் துறை­யி­னர் தெரி­வித்­த­னர். இச்சம்பவம் ­தொ­டர்­பாக காவல் துறை­யி­ன­ரும் விசாரணை தொடங்கி உள்­ள­னர். இது­வரை­யில் இச்­சம்ப­வம் தொடர்­பாக எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.