பத்து நாட்களில் புதிய அறிவிப்புகள் வெளியாகும்: பிரேமலதா தகவல்

பத்து நாட்களில் புதிய அறிவிப்புகள் வெளியாகும்: பிரேமலதா தகவல்

1 mins read
b0262601-a928-4cd7-ba72-e60bae4d0259
-

திருவண்ணாமலை:: அடுத்த பத்து நாட்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என பிரேமலதா கூறியுள்ளார். தாம் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் கட்சித் தலைமை அப்போது அறிவிக்கும் என திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்தார். "வேட்பாளர் பட்டியல் வெளியிட இன்னும் அவகாசம் உள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்று எனக்கு தெரியாது. அதனை விஜயகாந்த் வெளியிடுவார். விஜயகாந்த் எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம். "தேமுதிகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் யாரும் கட்சியைவிட்டு போகவில்லை. ஒருசில மாவட்ட செயலாளர்கள் சென்றிருக்கிறார்கள். அதெல்லாம் பெரிய விஷயமே அல்ல," என்றார் பிரேமலதா.