பிரேமலதாவுக்கு அமைச்சர் வளர்மதி எச்சரிக்கை

பிரேமலதாவுக்கு அமைச்சர் வளர்மதி எச்சரிக்கை

1 mins read
dc7823a7-83f3-44c2-a651-b621f4c687db
-

நெல்லை: முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசினால், பிரேமலதாவின் நாக்கு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என அமைச்சர் வளர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் பேசிய அவர், பிரேமலதாவை ஒருமையில் குறிப்பிட்டு ஏசினார். "முதல்வர் ஜெயலலிதா மக்களைச் சந்திக்கவில்லை என்று பிரேமலதா கூறுகி றார். உங்களுடைய கணவ ரையும் பத்து நாட்களாகக் காணவில்லை. அவர் எங்கே போனார்? உங்களது கணவரைப் போல் குடித்து விட்டுப் பேசுகிறீர்களா?" என்று கேள்விகளை அடுக்கினார் வளர்மதி.