அறுவைசிகிச்சை; மருத்துவமனை மீது நடவடிக்கை நகரி: ஹைதராபாத்தை அடுத்த போயன்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோவர்தன் ரெட்டி. இவரது மகன் நிகில் ரெட்டி. மென் பொருள் பொறியாளரான இவர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
5.7 அடி உயரமுள்ள நிகில்ரெட்டி இன்னும் உயரமாக வளர விரும்பினார். அப்போது, ஹைதராபாத்தில் உள்ள 'குளோபல்' மருத்துவமனையில் எலும்பு தொடர்பான மருத்துவர்களைச் சந்தித்துத் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரிடம், ரூ. 4 லட்சம் கட்டினால் அறுவைசிகிச்சை செய்வதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து விற்று ரூ. 3 லட்சத்தை நிகில் மருத்துவமனையில் கட்டினார். அதன்பின் பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்காமல் நான்காம் தேதி மருத்துவமனையில் சேர்ந் தார். அவருக்கு மருத்துவர்கள், கால்களின் எலும்புகளைத் துண்டாக்கி இடையே தகடு வைத்து அறுவைசிகிச்சை செய்தனர். இதற்கிடையே, மகன் மாயமானதால் தந்தை கோவர்த்தன் ரெட்டி போலிசில் புகார் செய்தார்.
நிகிலின் நண்பரிடம் விசாரித்தபோது, நிகில் மருத்துவ மனையில் சேர்ந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தனர். பெற்றோர் கையொப்பம் இல்லாமல் அறுவைசிகிச்சை செய்தது குறித்து நிகிலின் தந்தை மருத்துவர்களிடம் கேட்டார். அதற்கு, சிகிச்சை பெறுபவரின் கையொப்பம் மட்டுமே போதுமானது எனும் பதில் கிடைத்தது.
உயரமாக வளர ஆசைப்பட்டு வீட்டில் பணத்தைத் திருடி மருத்துவமனையில் கொடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிகில் ரெட்டி (உள்படம்). அவரை மருத்துவமனையில் பார்த்து கண்ணீர் வடித்த தந்தை (நிற்போரில் இடமிருந்து முதலாவது). படங்கள்: இணையம்

