இல.கணேசன்: ஐந்து கட்சிகளின் அங்கீகாரம் பறிபோகும்

இல.கணேசன்: ஐந்து கட்சிகளின் அங்கீகாரம் பறிபோகும்

1 mins read

தஞ்சை: சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவில் ஐந்து கட்சிகளின் அங்கீகாரம் பறிபோகும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஆருடம் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மக்கள் நலக் கூட்டணி இப்போது சரிந்துகொண்டே போகிறது என்றார். "ஆறு விழுக்காடு வாக்குகளைப் பெறவில்லை என்றால் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளுக்கும் அங்கீகாரம் போய்விடும். அந்தப் பட்டியலில் தேமுதிகவும் இப்போது சேர்ந்து விடும்போல் தோன்றுகிறது. "ஆட்சி அமையும் முன்பே வைகோ துணை முதல்வர், திருமாவளவன் கல்வி அமைச்சர் என்று விஜயகாந்தின் மைத்துனர் அறிவிக்கிறார். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் யார் முடிவெடுத்து, யார் அறிவிப்பார்கள் என்பது தெரிந்துவிட்டது," என்றார் இல.கணேசன்.