சென்னை: விமான நிலையத்தில் நிகழும் தொடர் விபத்துகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி மத்திய விமானப் போக்குவரத்து துறைக்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு, பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டன. எனினும் கண்ணாடிகள் உடைந்து நொறுங்குவது, கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுவது என இப்புதிய முனையங்களில் 61 முறை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
விமான நிலைய விபத்து: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
1 mins read
-

