சென்னை: மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 44 ஆயிரம் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அவற்றுள் சுமார் 8 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள், புதிய வழக்கு கள், நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு முன்பே எளிதில் தீர்வு காணப்படக்கூடிய வழக்கு கள் எனப் பலதரப்பட்ட வழக்கு களை மக்கள் நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன.
இதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களி லும் தேசிய லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்க ளின் விசாரணை அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழகத்திலும் மக்கள் நீதி மன்றங்கள் ஆயிரக்கணக்கான வழக்குகளை ஒரே நாளில் விசா ரணைக்கு எடுத்துக்கொண்டன. தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான சதீஷ் கே.அக்னிகோத்ரி மேற் பார்வையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் தலைமையில் 5 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3 அமர்வுகளும் வழக்குகளை விசாரித்தன. மேலும் மாவட்ட மற்றும் சார்பு, தாலுகா நீதிமன்றங்களையும் சேர்த்து மொத்த 249 அமர்வுகளில் வழக்குகளின் விசாரணை நடை பெற்றது.
இச்சமயம் இரு தரப்பு வாதங்க ளையும் செவிமடுத்த நீதிபதிகள் உடனுக்குடன் தீர்ப்பளித்து, வழக்குகளை முடித்து வைத்தனர். குடும்பநல வழக்குகள், தொழி லாளர் பிரச்சினை தொடர்பான வழக்குகளே அதிகம் விசாரிக்கப் பட்டன. இதையடுத்து 8 ஆயிரத்து 129 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டதாக நீதிமன்ற வட்டா ரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல்வேறு வழக்குகளில் ரூ.84.16 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுதாகர் மேற்பார்வையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 1 கோடியே 34 லட்சத்துக்கு மேல் இழப்பீடு வழங்கப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.2016-04-11 06:00:00 +0800