சென்னை: வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.3 கோடி பணத்தைப் பெற்றுக்கொண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏமாற்றிவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. நீலாங்கரையைச் சேர்ந்த கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், உதவிப் பொறியாளர் பணிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி மொத்தம் 107 பேரிடம் செந்தில் பாலாஜி பணம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் பெயரைக் கூறி திருச்சியைச் சேர்ந்த ஒருவர் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது.
பண மோசடி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு
1 mins read
-

