நெடுமாறன்: மக்களுக்காக போராடுபவர்களை தேர்வு செய்க

நெடுமாறன்: மக்களுக்காக போராடுபவர்களை தேர்வு செய்க

1 mins read
30b7226c-ad64-484b-9de7-549f13af3cb9
-

சென்னை: தமிழ்த் தேசிய உணர்வு கொண்ட, தமிழகத்தின் நலன்களைக் காக்கக்கூடியவர்களுக்கே தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்து அமையக்கூடிய அரசு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். "பயிற்சி மொழி, ஆட்சி மொழி, நீதிமன்ற வழக்காடு மொழி, வழிபாட்டு மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுடன், மதுவை ஒழித்து, இயற்கை வளங்களைப் பாதுகாத்து, ஊழலற்ற, நேர்மையான, ஆட்சியைத் தர வேண்டும்," என்று நெடுமாறன் கூறியுள்ளார்.