புதுடெல்லி: தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு கூடுதல் துணை ராணு வம் தேவை என்று டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வலியுறுத்தினார். தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வந்த அவசர அழைப்பின் பேரில் டெல்லி சென்ற அவர், பறக்கும் படையில் புதிதாக மத்திய அரசு அதிகாரிகள், துணை ராணுவத்தினரை சேர்ப் பது பற்றி அங்கு தேர்தல் ஆணை யர்களுடன் ஆலோசனை நடத் தினார். இந்த ஆலோசனையின் போது பதற்றமான வாக்குச்சாவடி கள், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பறக்கும் படையின் எண்ணிக் கையை உயர்த்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதல் துணை ராணுவம்: ராஜேஷ் லக்கானி வலியுறுத்து
1 mins read
-

