தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊடகங்களில் பரவும் அஜித்-ஜெயா படம்

1 mins read
db99ca84-f601-461c-8d7f-8cd7fb3ae4bd
-

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியையும் ஆதரித்து சில நடிகர், நடிகை யர்கள் பிரசாரம் செய்வது வழக் கம். ஆனால் அதே சமயத்தில் சில நடிகர்கள் அரசியலிருந்து ஒதுங்கி தொழிலில் மட்டுமே கவனம் செலுத்திவருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித், அவரது மனைவி ஷாலினி ஆகியோர் முதல்வர் ஜெயலலி தாவுடன் உள்ள படம் 'பேஸ்புக்', 'வாட்ஸ்அப்' போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி அனை வரது கவனத்தையும் ஈர்த்துவரு கிறது. இந்தப் படம் சென்னை மேயர் சைதை துரைசாமி மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டதாகும். வேகமாகப் பரவும் ஜெயலலிதா நடிகர் அஜித் படம் அதிமுகவுக்கு அஜித் ஆதரவு அளிப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது, சில அதிமுக தொண்டர்களின் வேலையாக இருக்கலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்து விளக்கிய அஜித் ரசிகர்கள் சிலர், "எங்கள் தலைவர் செய்யும் நல்லதுகூட வெளியே தெரியக்கூடாது என்று நினைப் பவர். அவர் உண்டு அவரது வேலை உண்டு என்று இருப்பவர். எங்களுக்கும் அதையே கற்றுத் தந்துள்ளார். அஜித் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளிக்க வில்லை," என்றனர்.