ஜி.கே. வாசன்: ஏன் சேர்ந்தோம்

ஜி.கே. வாசன்: ஏன் சேர்ந்தோம்

1 mins read

சென்னை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 100 பேர் தமிழ் மாநிலக் காங்கிரசில் இணையும் விழா நேற்று தேனாம்பேட்டை அலுவலகத்தில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜி.கே. வாசன், மக்கள் நலக்கூட்டணியில் தமாகா இணைந்தது குறித்து விளக்கம் அளித்தார். "கூட்டணி அமைப்பது குறித்து எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை. மேலும் தேர்தல் நெருங்குவதால் மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந் தோம். கடைசி நேரத்தில் சேர்ந்ததால் எங்களது கட்சிக்கு 26 தொகுதிகள்தான் கிடைத்தன. முன்கூட்டியே சேர்ந்திருந்தால் அதிக தொகுதிகள் கிடைத்திருக்கும்," என்று வாசன் குறிப்பிட்டார்.