தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் அதிமுகவைப் பின்பற்றி திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் அடிக் கடி வேட்பாளர்களை மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளன. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தாங்கள் தேர்தலில் தொடர்வோமா வெளியேற்றப்படுவோமா என்ற அச்சத்தில் உள்ளனர். அதனால் பெரும்பாலான வேட்பாளர்கள் பிரசாரங்களைத் தவிர்த்து வருகின்றனராம். அதிமுகவே ஆக அதிகமாக இதுவரை 8 முறை 17 வேட்பாளர்களை மாற்றி உள்ளது. வேட்புமனுத் தாக்கல் முடிவடைவதற்கு முன் இன்னும் எத்தனை தலைகள் உருளப் போகின்றனவோ, தாங்களும் மாற்றப்படலாம் என்ற அச்சம் காரணமாக செலவு செய்து பிரசாரத்தில் தீவிரம் காட்ட அதிமுக வேட்பாளர்கள் தயங்குவதாகக் கூறப்படுகிறது.
பிரசாரத்தைக் கண்டு பதுங்கும் தமிழக வேட்பாளர்கள்
1 mins read

