சீமான்: கருணாநிதியை தோற்கடிக்க வேண்டும்

சீமான்: கருணாநிதியை தோற்கடிக்க வேண்டும்

1 mins read
1661b5af-b294-4804-b388-6177e8be1599
-

திருவாரூர்: திமுக தலைவர் கருணாநிதி தமிழினத்தை அழித்தவர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். திருவாரூரில் நடை பெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், கருணாநிதியை தேர்தலில் தோற்கடிக்கவேண்டும் என்றார். "தமிழகத்துக்கு பல துரோகங்கள் செய்தவர் கருணாநிதி. கச்சத்தீவு, காவிரி உரிமைகள் பறிபோனதற்கு அவரே காரணம். காமராஜர் ஆட்சியில் ஊழல் இல்லை. ராஜாஜி, பக்தவத்சலம், அண்ணா ஆட்சியில் ஊழல், மது இல்லை. ஆனால் தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்தி யது கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். "தமிழினத்தை அழித்து, அதன்மீது இருக்கை அமைத்து பதவியை அனுபவிக்கும் கருணாநிதியை அவரது சொந்த மண்ணில் தோற்கடிக்க திருவாரூர் மக்கள் முன்வரவேண்டும்," என்றார் சீமான்.