வேட்பாளர்களை மாற்றும் கட்சிகள்: பட்டியலில் இணைந்தது தேமுதிக

வேட்பாளர்களை மாற்றும் கட்சிகள்: பட்டியலில் இணைந்தது தேமுதிக

1 mins read

சென்னை: அதிமுக, திமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் வேட்பாளர்களை மாற்றியுள்ளது. அக்கட்சி சார்பாக காஞ்சிபுரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சண்முக சுந்தரத்தை மாற்றிவிட்டு சி.ஏகாம்பரம் என்பவரை களமிறக்கி உள்ளது தேமுதிக தலைமை. இம்முறை மொத்தம் 104 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளது. இதில், 93 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். இரு தினங்களுக்கு முன் மீதமுள்ள 11 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேமுதிக. இந்நிலை யில் காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளரை மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.