சேலம்: தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களைக் கேட்டு, அவர்களின் தேவையை மனதிற்கொண்டே திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக கனிமொழி (படம்) கூறினார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோல்வி பயம் காரணமாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் இம்முறை தொகுதி மாறி போட்டியிடுவதாக தெரிவித்தார். "முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையை எப்படித் தயாரிப்பது என்பதே தெரியாமல் தடுமாற் றத்தில் உள்ளார். அதிமுக ஆட்சியில்தான் இலக்கு நிர்ணயித்து மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. சசிகலாவின் மிடாஸ் மது பான ஆலையில் இருந்து 11,000 கோடிக்கு மதுபானம் வாங்கியது அதிமுக அரசு. "இது மக்களை ஏமாற்றும் ஆட்சி. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு குறைந்துள்ளது," என்று கனிமொழி எம்பி குற்றம்சாட்டினார்.
தடுமாற்றத்தில் உள்ளார் ஜெயலலிதா: கனிமொழி கடும் விமர்சனம்
1 mins read
-

