கோவை: அரசுப் பேருந்தில் நகை வியாபாரிகள் கொண்டு வந்த 1.35 கோடி ரூபாய் பணத்தை உரிய ஆவணங்கள் இல்லையெனக் கூறி தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது அப் பகுதியில் பரபரப்பேற்படுத்தியுள்ளது. இவர்க ளைப் போன்று எண்ணற்ற வியா பாரிகள் பணத்தைப் பறிகொடுத்து விட்டு அவதிக்குள்ளாகும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. பலரின் தொழில்களும் கட்டுமானப் பணிகளும் முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தாங்கள் நகை வியாபாரிகள் என்றும் நகை விற்ற பணத்தைக் கொண்டு செல்வதாகவும் இருவரும் மன்றாடினர். எனினும் அப்பணத்தைத் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 10 லட்சத்துக்கு மேல் ஆவணங்கள் இன்றி பணம் பறிமுதல் செய்தால் வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருப்பதால் அப்பணம் வருமான வரித் துறையிடம் ஒப்படைக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

