இந்திய கிறிஸ்தவர் முன்னணி தனித்துப் போட்டி

இந்திய கிறிஸ்தவர் முன்னணி தனித்துப் போட்டி

1 mins read

சென்னை: சட்­டப்­பே­ரவைத் தேர்­த­லில் 60 தொகு­தி­களில் தனித்­துப் போட்­டி­யி­டப்போவ­தாக, இந்­திய கிறிஸ்­த­வர் முன்னணி கட்சி அறி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக சென்னை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அக்­கட்­சி­யின் தலை­வர் எம்.எல். சுந்த­ரம், தேர்­த­லில் தங்கள் கட்­சிக்கு மக்கள் ஆத­ரவு நிச்­ச­யம் கிடைக்­கும் என நம்­பிக்கை தெரி­வித்­தார். "எங்களுக்கு தேர்­தல் ஆணை­யம் திராட்சை சின்­னத்தை ஒதுக்­கி­யுள்­ளது. முதற்­கட்­ட­மாக 37 வேட்­பா­ளர்­கள் அடங்­கிய பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளோம். விரை­வில் அடுத்­த­கட்ட அறி­விப்­பு­கள் வெளி­யா­கும்," என்றார் சுந்த­ரம். முன்­ன­தாக இந்­திய கிறிஸ்­த­வர் முன்னணி திமுக அணி­யில் இணை­யும் என எதிர்­பார்க்­கப் ­பட்­டது.