சீமான்: முதல்வர் பதவி மக்கள் போட்ட பிச்சை

சீமான்: முதல்வர் பதவி மக்கள் போட்ட பிச்சை

1 mins read
a3cca168-6e1b-4058-9958-41d7a61ad0fc
-

ராமநாதபுரம்: தமிழர்களை எப்படி யாவது ஆள வேண்டும் என்பது தான் கருணாநிதிக்கும் ஜெயலலி தாவுக்கும் இருக்கும் ஒரே கனவு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜெய லலிதா வகித்து வரும் முதல்வர் பதவி என்பது மக்கள் போட்ட பிச்சை என்றார். மேலும் அதிமுகவையும் திமுக வையும் கடுமையாகச் சாடிய அவர், 94 வயதிலும் 70 வயதிலும் ஒரு தாத்தாவும் பாட்டியும் மீண்டும் மீண்டும் தமிழர்களை ஆளத் துடிப்பதாக விமர்சித்தார். "அற்ப வெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்ற வக்கற்ற அரசு இது. இவர்கள் அணு உலை வெடித்தால் எப்படி மக்களைக் காப்பார்கள்?

இலங்கையில் தமிழர் களை ஒடுக்கிய சிங்களர்களின் கொடூரத்தை கண்டுகொள்ள மறுத்தவர்கள் காங்கிரஸ் கட்சியி னர். அவர்களின் துரோக செய லுக்குத் துணை போனவர்கள் திமுகவினர்," என்றார் சீமான். ஒற்றை விரலை உயர்த்தி மக்கள் வாக்களிக்கவில்லையெ னில் ஜெயலலிதா மார்க்கெட் இழந்த முன்னாள் நடிகை மட்டுமே என்றும் அவரை யாரும் சீண்ட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், அரிசிக்கும் பருப்புக்கும் வேட்டிக்கும் சேலைக்கும் கையேந்தி நிற்பவர்கள் போட்ட பிச்சைதான் ஜெயலலிதா வகிக்கும் முதல்வர் பதவி என்றார்.