தேமுதிக அலுவலகம் தாக்குதலுக்கு வைகோ கண்டனம்

தேமுதிக அலுவலகம் தாக்குதலுக்கு வைகோ கண்டனம்

1 mins read
9d49be95-73f4-4cc2-ba74-3798f2c4e3ab
-

கோயம்பேடு: கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் மீது கல்வீசி தாக்கப்பட்டது பற்றி போலிஸ் விசாரித்து வருகிறது. இதற்கிடையே, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடத்தப் பட்ட தாக்குதலுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜய காந்த்தும் அவரின் மனைவி பிரேமலதாவும் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தனித் தனியே நடத்திவரும் பிரசாரத் தில் அதிமுக, திமுக கட்சிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாரோ மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிவிட் டனர். இதில் கட்சி அலுவலகத்தின் முன்புறம் சுவரில் பதிக்கப்பட்டு உள்ள அலங்கார முகப்புக் கண் ணாடி உடைந்து நொறுங்கியது. ஐந்து இடங்களில் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட வர்களைக் கண்டுபிடிக்க கட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்புச் சாதனத்தில் பதிவான காணொளிக் காட்சி களைக் கொடுத்தால் அதை வைத்து இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸ் தெரிவித்தது.